உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது

Published On 2023-03-20 08:43 GMT   |   Update On 2023-03-20 08:43 GMT
  • அதிகபட்சமாக திருச்சி ஜங்ஷனில் 33 மில்லி மீட்டர் மழை பதிவு
  • புறநகர் பகுதியில் ஆலங்கட்டி மழை

திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக வெப்ப தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்த திடீர் மழையின் காரணமாக கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ண நிலவியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருநாள்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இதில் திருச்சி மாவட்டம் இடம் பெறவில்லை. இருப்பினும் எதிர்பாராத விதமாக நேற்று பெய்த மழை மாநகர வாசிகளுக்கு ஆறுதலாக அமைந்தது.

பிற்பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து வெயில் குறைந்து காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் திருச்சி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகரப் பகுதிகளிலும் இந்த மழை ஆங்காங்கே பெய்தது.

ஆலங்கட்டி மழை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில், ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 15 முதல் 25 நிமிடம் வரையில் பெய்த இந்த மழையால் அப்பகுதியினர் ஆச்சர்யத்தில் மூழ்கினர். பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச்செய்தனர். நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நேற்றைய மழையில் அதிகபட்சமாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் 33 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

கல்லக்குடி- 4.2

லால்குடி- 32

தேவி மங்கலம் -7.2 சமயபுரம் -18

வாத்தலை அணைக்கட்டு- 6.4

மருங்காபுரி -4.2

முசிறி -29

தாபேட்டை -5

நவலூர் கொட்டப்பட்டு- 6.8

துவாக்குடி -3.2 துறையூர்-1 பொன்மலை -18.8 திருச்சி ஏர்போர்ட் -7.8 திருச்சி டவுன் -25.2 ஆகும்.

மாவட்ட முழுவதும் மொத்தமாக 201.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News