உள்ளூர் செய்திகள்

திருச்சி தேசியக்கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-03 09:35 GMT   |   Update On 2022-08-03 09:35 GMT
  • படிக்கும் காலத்தில் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும் இணைய விளையாட்டுகளில் பணம் இழக்க ‌வேண்டாம் .
  • குற்றங்கள் (பண பரிவர்த்தனை மற்றும் பிற) ஏற்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்

திருச்சி :

நூற்றாண்டு பெருமை பெற்ற திருச்சி தேதிய கல்லூரி தேசிய மாணவர் படையின் விமான படை பிரிவும், திருச்சி சைபர் கிரைம் காவல் பிரிவும் இணைந்து விழிப்புணர்வு முகாமை கல்லூரி கிருஷ்ணமூர்த்தி அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வரும், படைத்தலைவருமான முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் விமானபடை அதிகாரி டாக்டர். சுரேஷ் குமார் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது உதவி ஆய்வார் முரளி பேசுகையில், சைபர் கிரைம் (பணம் மற்றும் பணமில்லா) குற்றங்களை பற்றி விளக்கினார். சைபர்‌ கிரைம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் அறியாமை, ஆசை, அன்பு என்று கூறினார். படிக்கும் காலத்தில் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும் இணைய விளையாட்டுகளில் பணம் இழக்க ‌வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்.

கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சங்கர் பேசுகையில், இணையம் இன்றியமையாது உலகு என்று தொடங்கி தகவல்களை எப்படி இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார். குற்றங்கள் (பண பரிவர்த்தனை மற்றும் பிற) ஏற்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

சைபர் கிரைம் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். என்.சி.சி. விமான படையை சேர்ந்த சாக்‌ஷி, ரித்திகா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

Tags:    

Similar News