உள்ளூர் செய்திகள்

ரெயில்நிலையத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு

Published On 2022-06-18 09:35 GMT   |   Update On 2022-06-18 09:35 GMT
  • ரெயில்நிலையத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றது

திருச்சி:

முப்படைகளில் குறுகிய கா ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 13-ந் தேதி அறிவித்தது. இத்திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ரெயில்கள், பஸ்கள் போராட்டக்காரர்கள் எரித்ததால் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் திருச்சி ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தில் நுழைய முற்பட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் திட்டமாகும். ஆகவே அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News