சாயர்புரம் அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
- நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது
- காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியநகர் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஏரல் வட்டார காச நோய் பிரிவு மற்றும் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமினை புளியநகர் ஊர்நலக் கமிட்டி தலைவரும், சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவருமான அறவாழி தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் ஞானராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன், செல்வராஜ், சுரேஷ், சுகாதார செவிலியர் ஷீலா, சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன், இடைநிலை சுகாதார செவிலியர், முத்துலட்சுமி, பூர்ண கலையரசி, காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை ஆகியோர் காசநோய் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
முன்னதாக சுகாதார தன்னார்வலர்கள் சங்கரி, வெள்ளையம்மாள், விஜயா, உமா, மகேஸ்வரி ஆகியோர் புளியநகரில் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர். முகாமில் இருட்டறை உதவியாளர் எட்டையா மற்றும் ஹரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி முகாமினை ஆய்வு செய்தார்.