உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பால பராமரிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடி மேம்பால பராமரிப்பு பணி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பீச் ரோட்டை பயன்படுத்த வேண்டும்-பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள்

Published On 2022-10-05 08:43 GMT   |   Update On 2022-10-05 08:43 GMT
  • தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
  • இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

பராமரிப்பு பணி

அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 2-ம் கேட் மற்றும் 4-ம் கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ஆகையால் போக்குவரத்து நெரிசலை தவிர்பதற்காக 2-ம் கேட் மற்றும் 1-ம் கேட் வழியாக செல்லும் பொதுமக்கள் பீச் ரோட்டையும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.

தொடர்ந்து, கலைஞர் டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டார்,அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை தாங்கி நிற்கும் இந்த டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

மகிழ்ச்சி

எனது தந்தை சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்த போது கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் திறந்து வைத்தார்.

இன்று மாநகரத்தின் மேயராக இங்கு நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்விழாவில் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம், செல்வம், அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்க இறைவனை வேண்டினேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

நிகழ்ச்சியில், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், பிரபாகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News