சாலிகிராமத்தில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
- வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
- மாணவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், கே.கே. சாலை முத்துராமலிங்கம் தெருவில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்தது மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பால் மாத்யூ மற்றும் திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அதே கல்லூரியில் படித்து வரும் "சீனியர் மாணவர்" ஒருவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.