தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சிஸ்டத்தை சரி செய்வது குறித்து ரஜினியுடன் பேசினேன்- சீமான்

Published On 2024-11-22 08:12 GMT   |   Update On 2024-11-22 08:12 GMT
  • ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.
  • நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்யும்போது அந்த தலைவனை மக்கள் கொண்டாடுவார்கள். அப்படி இல்லாததால் நாங்க நல்ல ஆட்சி கொடுத்து இருக்கோம்... சிறப்பாக செய்றோ... யாராலையும் குறை சொல்ல முடியாதுன்னு ஆட்சியாளர்களே சொல்றாங்க.

மக்களால் கொண்டாடப்படும் தலைவன் என்றால், ஒரு தலைவன் வரப்போ தன்னிச்சையா ஓடிப்போய் மக்களே வரவேற்பு கொடுக்கறது இருக்கோம். ஆனா இங்க அப்படி இல்ல... நல்ல ஆட்சி கொடுத்தா வாக்குக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை தேவை இல்லை. அவசியமே இல்லை. தொடர்ச்சியா அதை தான் செய்றாங்க.. இங்க வந்து ஒண்ணுதான் சொல்ல தோணுது... சேவை அரசியலோ... செயல் அரசியலோ கிடையாது... செய்தி அரசியல் தான். கட்சி அரசியல் தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படலை. இந்த மாறுதல் தான் System Wrong-னு ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு மாத்தணும்னு சொன்னேன். அதுகுறித்து தான் பேசினோம்.

இந்த நாடும் மக்களும் நல்லா இருக்கணும் நினைக்கிறே எல்லா நல்லா உள்ளங்களுக்கும் அரசியல். அதுவே அரசியல் தான். ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.

நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல். ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிரை பிரிப்பதும் ஒரு மனிதனின் வாழ்வியலில் இருந்து அரசியலை பிரிப்பதும் இரண்டும் ஒன்று தான் என்பது என்னுடைய மதிப்பீடு. என்னுடைய புரிதல், கோட்பாடு... அந்த அடிப்படையில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அரசியல் என்பது தனியா என்று இல்லை. அது வாழ்வியல். அதனால் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. அந்த அரசு அரசியலைத்தான் தீர்மானிக்கிறது. அதனால் ரஜினிக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் எப்படி இருக்கும்.

விமர்சனத்தை கடக்க இயலாதவன், விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவன் அற்ப வெற்றியை கூட தொடமுடியாது. இதை என்னிக்கோ நான் படிச்ச கோட்பாடு என்றார்.

Tags:    

Similar News