சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- 1 டன் மலர்களால் சாமிக்கு அலங்காரம்
- கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 1 டன் மலர்களால் உற்சவர் பெரியநாயகி அம்மனுடன் விநாயகர் இருப்பது போன்று அலங்கரிக்கப்பட்டு அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமரவைக்க ப்பட்டது. அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.