உள்ளூர் செய்திகள் (District)

வேங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் வீதியுலா நடந்தது மற்றும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

வரகூர் வேங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

Published On 2022-08-21 09:01 GMT   |   Update On 2022-08-21 09:01 GMT
  • சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் வழுக்கு மரம் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்தனர்.
  • வழுக்கு மரத்தின் மீது ஏறிய இளைஞர் கீழே இறங்கி வந்து அவருக்கே உரித்தான தீபாராதனையை பெற்றுக் கொண்டார்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உறியடி உற்சவம் இந்த ஆண்டு 12ம் தேதி தொடங்கியது.

தினமும் மாலை சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினர்.

கோகுலா ஷ்டமி தினத்தன்று கிரு ஷ்ணன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று வெண்ணைத்தாழி கோல த்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இன்று அதிகாலை வரகூர் கடுங்கால் நதிக்கரை அமைந்துள்ள மண்டபத்திலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சகோத ரராய் பெருமாள்வெள்ளி சட்டத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கை அதிர, மத்தாப்பு ஒளி மிளிரகோவிலை நோக்கி புறப்பட்டது.

நாதஸ்வர இன்னிசை முழங்க அசைந்தாடி வந்த பெருமாளைபின்னே கூப்பிய கைகளுக்குள் தேங்காய் வைத்துக்கொண்டு திரளான பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாக கோவிலை நோக்கி வந்தனர்.

கோவிலின் முன்புற முள்ள அலங்கார பந்தலில் சுவாமி வைக்கப்பட்டு உறியடி தொடங்கியது.

அந்தரத்தில் ஊசலாடிய உரியை பிடித்து அதன் உள்ளே இருக்கும்பிரசா ங்களை எடுக்க இளைஞர்கள் பலரும் போட்டி போட்டனர்.

ஒரு வழியாக ஹரிஷ் குமார் என்ற இளைஞர் உறியைப் பிடித்து அதில் இருந்த பிரசாதங்களை எடுத்து அனைவருக்கும் வழங்கினார்.

பின்னர் வழக்கு மரம் ஏறுதல் தொடங்கியது.

வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்றமக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்தனர்.

வழுக்கு மரத்தின் மேல்வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்துமேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து அங்கிருந்து பக்தர்களுக்கு வழங்கினர்.

அதனை தொடர்ந்து வழுக்கு மரத்தின் மீது ஏறிய இளைஞர் கீழே இறங்கி வந்து அவருக்கே உரித்தான தீபாராதனையை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர்சுவாமி கோயிலுக்குள்சென்றது.

இன்று ருக்மணிகல்யாண உற்சவம் நடைபெறுகிறது.உறியடி விழா ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள்மற்றும் கிராம மக்கள்செய்து இருந்தனர்.

திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் வசந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News