உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3,222 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - 500 கர்ப்பிணி பெண்களுக்கும் செலுத்த ஏற்பாடு

Published On 2023-08-08 08:49 GMT   |   Update On 2023-08-08 08:49 GMT
  • கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
  • குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம்.

நெல்லை:

கடுமையான நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகி விடாமல் இருப்பதற்காக தமிழகத்தில் கால அட்டவணைகளின் படி குழந்தை களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இத்தகைய தடுப்பூசிகள் போடப்படுவதன் காரண மாக அவர்களுக்கு தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதை தடுக்க லாம்.

இதற்காக தமிழக அரசு, பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தை களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகிறது. எனினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.

கிராமப்புற மகளுக்கு தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் பணிச்சுமை காரணமாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா? என்ற விவரத்தை செவிலியர்கள் சரியாக கணக்கிடாமல் விட்டு விடு கின்றனர்.

இதனை ஈடு கட்டும் வகையில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம். வழக்கமாக தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்களுக்கு தற்போது தமிழக அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் அதாவது மாநகராட்சி நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்த்து இதுவரை 3,222 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

இதே போல் 500 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறது. அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சராசரியாக ஒரு வாரத்தில் 6 நாட்களில் 1200 முகாம்கள் அமைக்கப்பட்டு விடுபட்டவர்கள் அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை கிராமப்புற கர்ப்பிணிகள், குழந்தைகள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அந்தந்த பகுதி சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News