உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உள்ளனர்.

வைத்தியநாதப் பெருமாள் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம்

Published On 2022-07-04 10:13 GMT   |   Update On 2022-07-04 10:15 GMT
  • பரமத்தி வேலூர் வைத்தியநாதப் பெருமாள் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
  • அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன்‌ அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் அருள் தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்தியநாதப் பெருமாள் கோவில் 15-ம் ஆண்டு விழா, அம்மையப்பர் திரு க்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை‌ பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு ‌‌‌நடைபெற்றது.

காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு அருள்தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மதியம் 1 மணிக்கு அன்ன ம்பாலித்தலும்,மாலை 6 மணிக்கு அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன்‌ அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவி ற்கான ஏற்பாடுகளை பரமத்தி தையல்நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் கோயில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News