உள்ளூர் செய்திகள் (District)

முதலிடம் பிடித்த வைத்தியலிங்கபுரம் அணிக்கு மால் ராஜேஷ் பரிசு வழங்கிய காட்சி.

உடன்குடியில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் வைத்தியலிங்கபுரம் அணி முதலிடம்

Published On 2022-08-03 08:21 GMT   |   Update On 2022-08-03 08:21 GMT
  • கபடி போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

உடன்குடி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி வைத்தியலிங்கபுரம் 'யங்பிரண்ட்ஸ் கிளப்' கபடி அணியினர் நடத்திய மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.இறுதி போட்டியில் வைத்தியலிங்கபுரம் எங்பிரண்ட்ஸ்அணி முதலிடம்பெற்று வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது 2-வது இடத்தை லெட்சுமிபுரம் அணியும், 3-வது இடத்தை கார்த்திக் பிரதர்ஸ் அணியும், 4-வது இடத்தை முதலூர் அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பையை உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளருமான சந்தையடியூர் மால் ராஜேஷ் வழங்கினார்.

இதில் உடன்குடி பேரூர் தி.மு.க., துணைச் செயலாளர் தங்கம், மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி இசக்கிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News