உள்ளூர் செய்திகள் (District)

ராஜா எம்.எல்.ஏ. முயற்சியால் சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப்பணிகள்-2 ஆண்டுகளுக்குள் சாதனை

Published On 2023-05-07 07:47 GMT   |   Update On 2023-05-07 07:47 GMT
  • சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
  • விசைத்தறி உற்பத்தியாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

சங்கரன்கோவில்:

தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலத்திற்குள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முயற்சியாலும் முதல்- அமைச்சரின் நடவடிக்கையால் சங்கரன் கோவில் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மக்களு க்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ரூ. 12 கோடியில் புதிய கட்டிடம்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அங்கு வரும் தொகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏ. ராஜா இல்லாத நேரத்திலும் எழுதிக் கொடுத்து விட்டு சென்றால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம், ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலக கட்டிடம், திருவேங்கடத்தில் ரூ. 2.61 கோடி மதிப்பீட்டில் புதிய தாசில்தார் அலுவலகம், குருவிகுளம் பள்ளி வளாகத்தில் ரூ. 5.2 லட்சம் மதிப்பில் கழிப்பறை வசதியுடன் கூடிய வகுப்ப றைகள், பெருங்கோட்டூர் மற்றும் பெரும்பத்தூர் கிராமத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை, சங்கரன்கோவில் தொகுதியில் சுய உதவிக் குழுக்கள் தொழில் வாய்ப்புகள் பெருக்கவும் புதிய தொழில்கள் உருவாக்கவும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 3 வட்டார வணிக மையங்களுக்கு 107 லட்சம் நிதி ஒதுக்கீடு, பெண் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 46 லட்சம் வழங்கப்பட்டுள்ளது,

அடிப்படை வசதிகள்

ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில ரூ. 2.80 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள், சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் ரூ. 6.99 லட்சம் மதிப்பீட்டில் மின்சாதனம், மக்களை தேடி மருத்துவ வாகனம், சங்கரன்கோவில் நகராட்சி யில் ரூ. 69 லட்சத்தில் நமக்கு நாமே திட்டம் திட்டத்தின் கீழ் 4 பணிகள், நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு விழா நடத்தாமல் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சாயமலை கோவில் கும்பாபிஷேக பணிகள், சங்கரன்கோவில் கோவில் கும்பாபிஷேக பணிகளு க்காக நிதி ஒதுக்கீடு, அரசு மருத்துவமனைக்கு முன்னோடி கட்டிடம் கட்ட ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு, விசைத்தறி உற்பத்தி யாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று உத்தரவு, புதிய பஸ்நிலைய பணிகள், புதிய வணிக வளாகம், சங்கரன்கோவில் தொகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம், சங்கரன்கோவில் தொகுதி குருவி குளம், மேலநீலித நல்லூர், மானூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டின்றி கிடைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தி அது விரைவில் சரி செய்யப் படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேவநேய பாவாணர்

சங்கரன்கோவில் தொகுதியில் பிறந்த தேவநேய பாவாணருக்கு, சென்னையில் சிலை, சங்கரன்கோவில் நகர்ம க்களுக்கு தினசரி குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் 2 புறவழிச் சாலைகள், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் திருவேங்கடம் சாலை வரை நான்கு வழிச்சாலை திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

Tags:    

Similar News