நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருஷாபிஷேகம்-மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது
- ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
- யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி சுவாமி நெல்லை யப்பர், காந்திமதி அம்பாள் கோவில் நடை இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் தனி தனியாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூல விமா னங்களுக்கு தனித்தனியாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள, பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.