உள்ளூர் செய்திகள்

 வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.

திட்டமிட்டபடி வாணாபுரத்தில் புதிய தாலுகா அலுவலகம் செயல்படும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தகவல்

Published On 2023-04-17 10:43 GMT   |   Update On 2023-04-18 08:17 GMT
  • ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார்.
  • புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும்

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும் மே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதனை தொடங்கி வைக்கவும் உள்ளார்கள். அதேபோல் புதிய தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்ட அறிக்கையும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மேலும் புதிய தாலுக்கா அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சில விஷமிகள் வாணாபுரம் தாலுகாவின் தலைநகர் வேறெங்கோ செல்வதாக தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். தவறான தகவல் பரப்புவோர் மீது மாவட்ட காவல்துறையின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags:    

Similar News