புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதியுலா
- தினமும் இரவு வேதநாயகி அம்மன் பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
- வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் இரவு வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம், இந்திரா விமானம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். அதன்படி, நேற்று இரவு அம்மன் மகாரதோற்சவக்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெ ற்றது. இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சார்பாக புஷ்ப பல்லக்கில்அம்மன் வீதியுலா காட்சி நடைபெ ற்றது. விழாவில் யா ழ்ப்பாணம் பவரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள் ஓதுவார் மூர்த்திகள்கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவி னரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், அன்னதானமும் நடைபெற்றது.