உள்ளூர் செய்திகள்
தமிழ் தட்டச்சு தேர்வில் வேடசந்தூர் மாணவி மாநில அளவில் முதலிடம்
- வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
- எனது வெற்றிக்கு பயிற்சியாளர்களின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.
வேடசந்தூர்:
தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் சி.ஒ.எ. ஆகிய தேர்வுகளை நடத்துகிறது.
2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தமிழ் தட்டச்சு இளநிலையில் முதல் தாள் 100 மதிப்பெண்கள் இரண்டாம் தாள் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் கூறுகையில், எனது வெற்றிக்கு பயிற்சியாளர்கள் முனியப்பன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.