உள்ளூர் செய்திகள்

ஏலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு

Published On 2023-04-01 05:42 GMT   |   Update On 2023-04-01 05:42 GMT
  • வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.
  • இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 7 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், முடி காணிக்கை, உணவுகூடம் ஆகியவைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.

இதில் முடிகாணிக்கைக்கான ஏலத்தை மாயி என்பவர் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். ஆனால் கண்மலர் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.4 லட்சம், உணவு கூடத்தி ற்கான ஏலத்தொகை ரூ.19 லட்சம், ராட்டினம் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.1 கோடியே 50 லட்சம் என ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது.

இந்த ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரிய வர்கள் இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News