உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் காய்கறி விலை கடும் உயா்வு

Published On 2024-06-21 08:40 GMT   |   Update On 2024-06-21 08:40 GMT
  • மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.

சென்னை:

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே பருவமழை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 200, பட்டாணி ரூ. 240, இஞ்சி ரூ. 170, பூண்டு ரூ. 330, அவரைக்காய் ரூ. 100, சின்ன வெங்காயம் ரூ. 100, வண்ண குடை மிளகாய் ரூ. 190-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேபோல, ஒரு கிலோ தக்காளி, பச்சைமிளகாய், பீா்க்கங்காய் ஆகியவை தலா ரூ. 75, ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட், காராமணி, சேனைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.70, முள்ளங்கி ரூ. 50, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, புடலங்காய் ரூ. 45, எலுமிச்சை ரூ. 90, கட்டு புதினா, கொத்தமல்லி தலா ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Tags:    

Similar News