உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி டானிங்டனில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Published On 2023-04-13 08:56 GMT   |   Update On 2023-04-13 08:56 GMT
  • இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • காவலரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

கோத்தகிரி,

கோத்தகிரி டானிங்டன் எம்ஜிஆர் சிலை சதுக்கம் பகுதியில் உள்ள சாலைகள் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக உள்ளது.

கோத்தகிரியின் முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனையை பார்ப்பதற்காக சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வருகின்றனர்.

அவ்வாறு வரும் வாகனங்கள் அனைத்தும் டானிங்டன் எம்ஜிஆர் சதுக்கம் பகுதிக்கு வந்து, அதன் பின்னரே பிரிந்து செல்ல வேண்டும்.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் காணப்படும். இதுபோக உள்ளூர் மக்கள் பணி முடிந்து பஸ்சுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் திரண்டு நிற்பார்கள்.

இப்படி எப்போதும் பரபரப்பாகவும், வாக னங்கள் சென்று கொண்டி ருக்கும் இந்த சாலையின் அருகே டீக்கடை, மளிகை கடை, உணவகங்களும் உள்ளன.

இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களையே சாலை யிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் தேநீர் அருந்த வரும் உள்ளூர் வாசிகள் தங்களின் நான்குசக்கர வாகனங்களை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்திவிட்டு வாகனத்தி னுள் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருப் பர்.

இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சில சமயம் பஸ் நிறுத்த இடமில்லாமல் சாலையின் நடுவிலேயே நிற்பதால் பின்னால் வரும் வாக னங்கள் ஒலி எழுப் பிக்கொண்டே இருக்கும். அப்போது பெண்கள் குழந்தைகள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாகவே பஸ் நகர்ந்து விடும்.

அந்த சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பல முறை சமூக ஆர்வலர்கள் கோத்த கிரி போக்குவரத்து போலீ சாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே இனியாவது சம்மந்தப்பட்ட போக்கு வரத்து போலீசார் இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலரை பணியில் ஈடுப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News