உள்ளூர் செய்திகள்

சீலேரி கிராமத்தில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.

அணைக்கட்டு சீலேரி கிராமத்தில் காளைகள் முட்டி 14 பேர் காயம்

Published On 2023-03-18 08:58 GMT   |   Update On 2023-03-18 08:58 GMT
  • எருது விடும் விழா நடந்தது
  • போலீசார் பாதுகாப்பு பணி

அணைக்கட்டு:

அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி, சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது.

இதில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தனர். வாடிவாசலில் இருந்து காலை 10 மணி முதல் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் வழிமறித்து நின்று இருந்ததால் பல காளைகள் வழி தெரியாமல் ஓடுப்பாதையில் இருந்த இளைஞர்களை தூக்கி வீசி சென்றனர்.

இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனையடுத்து பகல் 2 மணிக்கு காைள விடும் விழா முடிவடைந்தது. முதல் பரிசாக ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பணியில் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணகரன், அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News