உள்ளூர் செய்திகள் (District)

விவசாய நிலத்தில் பிடிப்பட்ட 15 அடி நீள மலைப்பாம்பு

Published On 2022-12-27 09:38 GMT   |   Update On 2022-12-27 09:38 GMT
  • வனத்துறையினர் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்
  • குடியிருப்பு வாசிகள் அச்சம்

அனைக்கட்டு:

ஒடுகத்தூர் அருகே உள்ள முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருக்கும் அட்டக்கால்வாய் எனும் பகுதியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

மலைபாம்பு

மேலும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை தேடி விவசாய நிலத்தில் படுத்துக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது நிலத்திற்கு கால்நடைகளை பிடித்து சென்ற விவசாயி காந்தி என்பவர் திடீரென அதனைப்பார்த்த கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 15 அடி நீளமும் 80 கிலோ எடைகொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே இருந்த காப்புக்காட்டில் விட்டனர்.

தொடர் மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இரவு மற்றும் பகல் நேரங்களில் படையெடுத்து வரும் மலைப்பாம்புகளை கண்டு குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் நிலத்தில் மேச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த பிடிப்படும் மலைப்பாம்புகளை அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடாமல் வன உயிரியல் பூங்காவில் விட்டால் கால்நடைகள் மட்டுமில்லாமல் பொதுமக்களுக் நிம்மதியாக இருப்போம் என அதிகாரிகளுக்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News