உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்ற காட்சி.

வேலூரில் 30-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறி நாய்

Published On 2023-01-24 08:07 GMT   |   Update On 2023-01-24 08:07 GMT
  • மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன்
  • விரட்டி விரட்டி பிடித்து சென்றனர்

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பாதசாரிகளையும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு ஏராளமா னவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது. பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சுமார் 30 பேரை கடித்தது.

பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.

சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர்.

அப்போது தெரு நாய்கள் அவர்களை கண்டு ஓட்டம் பிடித்தன. நாய்களை விரட்டி விரட்டி பிடித்தனர்.கலெக்டர்அலுவலக வளாகம் மற்றும் அதன் அருகில் நின்றநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இன்று காலை வரை சுமார் 20 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

பிடிபடும் தெரு நாய்கள் வேலூர் கோட்டை அருகே உள்ள கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News