வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ரூ.6.86 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
- 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி இருந்தது
- ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்து சமய அறநிலை யத்துறை வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் நாகநாத சாமி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் பாபு மற்றும் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம், 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.