உள்ளூர் செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் அடிப்படை கூலி உயர்வு வேண்டும்

Published On 2023-05-12 06:58 GMT   |   Update On 2023-05-12 06:58 GMT
  • காங்கிரஸ் நெசவாளர் அணி வலியுறுத்தல்
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தனியார் திருமண மண்டபத்தில் மாநில காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாநில நெசவாளர் அணி தலைவர் ஜி.என்.சுந்தரவேல் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் டி.ஆர்.கோதண்டராமன், டி.கே.கதிரேசன், மாநில நெசவாளர் அணி பொருளாளர் அனகை விமல்காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.எம். தேவராஜ் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஜவுளிபூங்கா அமைக்கவேண்டும்.இந்த ஜவுளிபூங்காவிற்கு முன்னாள் முதலமைச்சர் குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருந்தலைவர் காமராஜர் பெயரவைக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது.

நெசவுத் தொழிலுக்கான நூல் சாய மருந்துகள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜி எஸ் டி வரியை முற்றிலுமாக நீக்கி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

தமிழக அரசு நெசவாளர்களுக்கான ஓய்வூதியம் தற்போது ரூ.1000 மட்டும் வழங்கி வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப நெசவாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு அறிவித்த 10 சதவீதம் அகவிலைப்படியை ஜனவரி 1-ந் தேதியிட்டு அனைத்து நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், மேலும் அடிப்படைக் கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்களை நகர நெசவாளர் அணி தலைவர் கோ.ஜெயவேலு வாசித்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள். நெசவாளர் அணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News