உள்ளூர் செய்திகள்

சிறுத்தைகள் கடித்து கொன்ற நாயை படத்தில் காணலாம்.

நாயை கடித்துக் கொன்ற சிறுத்தைகள்

Published On 2022-09-19 09:50 GMT   |   Update On 2022-09-19 09:50 GMT
  • வனத்துறையினர் விசாரணை
  • கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது.

அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, சிவக்குமார் ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடுகள் மற்றும் கன்று குட்டியை 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிப்பவர் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருவதால்நாய்கள் குரைக்குமாம். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நாய்கள் குறைத்துக் கொண்டே இருந்துள்ளது அப்போது முனிரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு சிறுத்தைகள் உலா வருகிறது என இருந்துள்ளனர் சிறிது நேரம் கழித்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அவர்கள் வெளியே வந்து கூச்சல் போட்டுள்ளனர். நாயை சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது தெரியவந்தது உடனடியாக சத்தம் போட்டபடி சென்றபோது நாயின் கழுத்துப் பகுதியில் சிறுத்தை கடித்து கொன்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் நாயை சிறுத்தை கொன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தைகள் நாயை இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News