உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

வேலூரில் பருவமழைக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

Published On 2022-09-09 09:18 GMT   |   Update On 2022-09-09 09:18 GMT
  • அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுரை
  • ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முழுமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிக அளவு மழை வெள்ளம் வந்ததால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்கு செல்லாதவாறு தடுக்க அதிகாரிகள் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி மழை வெள்ளம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் மரைக்கிளைகள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதே போல் மழை மானி சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News