உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தயாரித்த உணவுகளை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சாப்பிட்ட காட்சி.

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி

Published On 2022-12-07 09:24 GMT   |   Update On 2022-12-07 09:24 GMT
  • கலெக்டர் தகவல்
  • பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுக்க நடவடிக்கை

வேலூர்:

வேலூர் பிள்ளையார் குப்பம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது‌. இங்கு 76 பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.

அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் கலெக்டர் குமார வேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளியில் பாடம் நடத்தும் விதம், மாணவர்களின் செயல்பாடு, புரிதல் தன்மை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு அங்குள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில்;

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களின் கற்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாரந்தோ றும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிளஸ் 2 வகுப்பு மட்டும் செயல்பட்டு வருகிறது அடுத்த கட்டமாக அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கான விடுதி மற்றும் வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் ஐஐடி போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. வருகிற புயல் மழையில் விவசாய பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அது குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News