- வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
- 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன
வேலூர்:
வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு மட்டுமல்லாது காலை 9 மணி பனிப்பொழிவு உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போர்வைக்குள் தஞ்ச மடைந்தனர்.
ஒரு சிலர் சாலையோரங்களில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லார மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர்.
சென்னையில் இருந்து ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
இதேபோல் காட்பாடி,வள்ளிமலை, பொன்னை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிபொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் வாக னங்களை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டி ருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.