உள்ளூர் செய்திகள்
வள்ளிமலையில் கிடந்த வாலிபர் பிணம் அடையாளம் தெரிந்தது
- விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலை மலை மீது நேற்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் விருதுநகரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி பால்பாண்டி (வயது 23) என தெரிய வந்தது. பால்பாண்டி விருதுநகரில் இருந்து வள்ளி மலைக்கு ஏன் வந்தார்.
இரவு நேரத்தில் மலை மீது சென்றது ஏன்? யாராவது பால்பாண்டியை மலை மீது இருந்து தள்ளி கொலை செய்தார்களா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.