- சந்திர கிரகணத்தையொட்டி நடவடிக்கை
- சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை
வேலூர்:
சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை சாத்தப்பட்டது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் இன்று மதியம் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான சீனிவாச பெருமாள் கோவிலில் காலை முதலே நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு தேவஸ்தான கோவில் நடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் கோவிலில் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
ஸ்ரீபுரம் தங்கக் கோவில் இன்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது.தொடர்ந்து இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முருகர் கோவிலிலும் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.