உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- விழுப்புரம் நகரப் பகுதிகளில் போலீசார் ரோந்துபணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான நபரை விசாரணை செய்தனர்.
- அவர் பயாஸ் அகமது (வயது 23)என்றும்,அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்,
விழுப்புரம்:
விழுப்புரம் நகரப் பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கிழங்கு விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ெரயில்வே காலனி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இதில் விழுப்புரம் நாப்பாலைய வீதியை சேர்ந்த சம்சுதீன் மகன் பயாஸ் அகமது (வயது 23) என்பது தெரியவந்ததும். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.