உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே உள்ள இரவு பயண வழி ஓட்டல்களில் காலாவதியான பொருட்களை கொட்டி அழிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி ஓட்டல்களில் அதிரடி சோதனைகாலாவதியான உணவு பொருட்கள் கொட்டி அழிப்பு

Published On 2023-02-11 08:38 GMT   |   Update On 2023-02-11 08:38 GMT
  • தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை திடீர்ஆய்வு மேற்கொண்டனர்
  • காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் போன்றவற்றை 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயண வழி உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என பல்வேறு புகார்கள் மீண்டும் வந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்படி, விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். சுகந்தன் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் , பிரசாத், பத்மநாபன் , ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் கதிரவன், ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது 2 உணவகங்களின் சமையல் கூடம் சுகாதாரமின்றி காணப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகங்களுக்கு முன்னேற்ற அறிக்கை வழங்கி அவற்றை தற்காலிகமாக நிறுத்தவும் செய்து குறைகளை சரி செய்த பின் மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் 2 உணவகங்கள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு தலா ரூ,2000அபராதம் விதிக்கப்பட்டதுஆய்வின்போது உணவகங்களில் மீதமான வெஜிடபிள் பிரியாணி ,காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் கேக் மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பாதாம் குளிர்பானங்கள் , சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை சுமார் 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

ஆய்வின் போது உணவக நடத்துவோருக்கு குறைகளை சுட்டி காட்டி 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தப் பட்டது. தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயணியர்களிடமும் அவ ர்களை கருத்துக்களை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News