உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் செக் ேபாஸ்டில் போலீஸ் சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களுக்கு உறுதிமொழி ஏற்க வைத்தகாட்சி.

விக்கிரவாண்டியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை

Published On 2023-09-08 07:54 GMT   |   Update On 2023-09-08 07:54 GMT
  • உறுதிமொழி எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர்
  • பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறினார்.

விழுப்புரம்:

விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணிக்கும் போது பஸ்களின் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாய்சங் உத்திரவின் பேரில் சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி நேற்று காலை திருவக்கரையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, பனையபுரம் செக் போஸ்டில் பஸ்சிலிருந்து இறக்கி அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறி இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடை பிடிக்க உறுதி மொழி ஏற்க வைத்தார். மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பஸ் டிரைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.

Tags:    

Similar News