உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் சாலைமறியல் செய்ததால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.

விழுப்புரம் அருகே ஆற்றில் மாயமான வாலிபர்களை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

Published On 2022-09-18 08:19 GMT   |   Update On 2022-09-18 08:19 GMT
  • சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர்.
  • ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது30), செந்தல்(30). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை. இரவு நேரமாகியும் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். இன்று காலை பேரங்கியூர் ஒன்று திரண்டனர். அவர்கள் ஆற்று முகப்பில் உள்ள திருச்சி- சென்னை சாலையில் அமர்ந்த மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே பஸ் போக்குவரத்து மாற்று வழியாக திருப்பி விடப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ஆனந்தன் ஆகியோர் விரைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவும் அங்கு விரைந்தார். அப்போது கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்த தாசில்தார் பாஸ்கரன் விரைந்து சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை மீட் கும்பணி துரிதப்படுத்தப் படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறி யல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News