உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே மின்சார வாரியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2023-06-01 06:50 GMT   |   Update On 2023-06-01 06:50 GMT
  • குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
  • தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து நேற்று இரவு திருவட்டத்துறை, கொடிக்க ளம் கிராமமக்கள் விருத்தா சலம்- திட்டக்குடி சாலை யில் கொடிக்களம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடு பட்டிருந்த பொது மக்களி டம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெரில் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். விழுப்புரம் மாவட் டத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் அரகண்ட நல்லூரில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார பிரமுகர்களும் தொடர் மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் காரணம் கேட்கும் பொழுது ஏன் மின்வெட்டு ஏற்படுகின்றது என்கிற காரணம் எங்களுக்கே தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் பதில் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அறி விக்கப்படாத மின்வெட்டுக் கான காரணம் என்னதான் என புரியாமல் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.

Tags:    

Similar News