உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே தெருக்கூத்து நாடகத்தை ரசித்த கிராம மக்கள்

Published On 2022-07-03 08:56 GMT   |   Update On 2022-07-03 08:56 GMT
  • மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

காரமடை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு இரணிய தெரு கூத்து நாடகம் நடைப்பெற்றது.

வாக்கனாங்கொம்பு இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பண்டைய கால வரலாற்று ஆன்மிக சம்பவங்களான இரனியனை வதம் செய்யும் நிகழ்ச்சியே இந்த நாடகம். இதில் அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்வது போன்று நடித்து காண்பிக்கப்பட்டது. இதனை மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து இரணிய நாடக சபா சண்முகம் கூறியதாவது:-

63 ஆண்டுகளாக இந்த நாடக அரங்கேற்றத்தை எங்கள் முன்னோர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம். பண்டைய கால மக்களின் வாழ்வில் கோவில் திருவிழா என்றால் தெருக்கூத்து நாடகம் தான் நியாபகம் வரும். பல ஆன்மிக கதைகள் நாடகங்களாக மக்கள் முன்பு போடப்பட்டு அவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மோத்தேபாளையம் கொங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்யும் நாடகம் நடத்தப்பட்டது. இந்த ஆன்மிக நாடகத்தில் உள்ளூரை சேர்ந்த வாலிபர்களே பங்கேற்று அனைத்து வேடங்களிலும் தங்களது திறமையை காட்டினர்.

தற்போது உள்ள சூழலில் கோவில் விழாக்களில் சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அனைவரையும் ஏற்பாடு செய்து வரும் நிலையில் பண்டைய கால நடைமுறைப்படி நம் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாக உள்ள தெருக்கூத்து நாடகங்களை கிராமத்தில் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இந்த கிராம மக்கள் இறங்கியுள்தை பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News