உள்ளூர் செய்திகள்

சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-12 07:52 GMT   |   Update On 2023-07-12 07:52 GMT
  • அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
  • அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை.

புதுச்சேரி:

காரைக்கால் முதல் பேரளம் வரை இயங்கிவந்த ெரயில் போக்குவரத்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. காரைக்கால் மக்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் நாகூர் வரையில் அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், பெரும்பா லுமான வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ெரயில் போக்குவரத்திற்கு, கடந்த சில ஆண்டுகளாக அகல ெரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் ெரயில் நிலையம் அருகே, திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகள் உள்ளது.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரிலிருந்து தமிழக மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை இணைக்கும் ஜவகர் சாலையில் மக்கள் ெரயில் பாதையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துதர வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்பகுதியில் சுரங்க பாதை அமைத்தால் திருவாரூர் மாவட்ட பகுதிகளான உபயவே தாந்தபுரம், மேனாங்குடி, செம்பியநல்லூர், ரெட்டக்குடி உள்ளிட்ட ஆறு பஞ்சாயத்துக்களிலும் உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறு வார்கள் என்பதால், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை. மேற்கண்ட கோரிக்கையை வலி யுறுத்தும் வகையில், ஜவகர் சாலை அருகே, அப்பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்படோர் ஆனந்தன், துரைசாமி ஆகியோர் தலைமையில் ஒன்று கூடி, காரைக்கால்-பேரளம் அகல ெரயில் பாதையில், அம்பகரத்தூர் ஜவகர் சாலை வழியாக, சுரங்கப் பாதை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Tags:    

Similar News