உள்ளூர் செய்திகள்
கருவேப்பஞ்சேரியில், பஸ் நிலையம் இல்லாததால் கிராம மக்கள் அவதி
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்பட்டது.
- முதியவர்கள் பலர் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் வேலை நிமித்தமாக அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்பட்டது.
ஆனால், இது நாள் வரை அங்கு பஸ் நிலையம் கட்டவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பலர் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையில் நனைந்தபடியும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.