உள்ளூர் செய்திகள்

சாலை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

Published On 2022-10-25 09:17 GMT   |   Update On 2022-10-25 09:17 GMT
  • 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து காய்கறிகளை வண்டிகளில் ஏற்றி வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட புதுமந்து பகுதியை அடுத்து முருகன் கோவில் மேடு பகுதி உள்ளது. இங்கு சுமார் 37 குடும்பங்கள் வசித்து வருகின்றன, எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் தினமும் அப்பகுதி மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி தலைவரும், வார்டு கவுன்சிலரும், 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மெயின் ரோட்டில் இருந்து முருகன் கோவில் மேடு பகுதிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும். சாலை வசதி கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, ஓரு சில வீடுகளில் மட்டும் மின்சாரம் வசதிகள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகளும் இந்த வழியாக பயணிப்பதால் பெரும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் விவசாயம் செய்து வருகின்றன.மற்றும் காய்கறிகளை தோட்டத்தில் இருந்து தலை சுமையாக 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து வண்டிகளில் ஏற்றி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தொட்டபெட்டா ஊராட்சியும் இதனைகண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News