உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளி வாலிபர் மீது போலீசார் நீரை ஊற்றி அவரை தடுத்து நிறுத்துவதை படத்தில் காணலாம்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-01-09 08:10 GMT   |   Update On 2023-01-09 08:10 GMT
  • மாற்றுத்திறனாளி கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார்.
  • மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் அடுத்த பெரிய தச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் மன உளைச்சலடைந்த நாகராஜ், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைவாக சென்று அவர் மீது நீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News