விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
மத்திய அரசு கடந்த 1-ந்தேதி பிளாஸ்டிக் கேரிப்பை போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது. இதன்படி தமிழக அரசு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுரையில் விழுப்புரம் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி விழுப்புரம் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் ரமணன், சுகாதாரப் பணி யாளர்கள் உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் சிறு சிறு கடைகள் சாலை ஓரங்களில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.
மேலும் விழுப்புரம் பாகர்சா மற்றும் மகாத்மா காந்தி சாலை இரு வீதிகளிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தமிழரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 20 கிலோ முதல் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தில்10,000வரை வசூலிக்கப்பட்டது.
மேலும் பறிமுதல் வேட்டை பின் கமிஷனர் இது குறித்து கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதை மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அங்குள்ள காய்கறி கடை பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை வைத்திருக்கும் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தார்.