உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பழனியிடம் கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

விழுப்புரம் மாவட்டம் குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநில அளவில் 2-ம்இடம்

Published On 2023-11-24 07:15 GMT   |   Update On 2023-11-24 07:15 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததை தொடர்ந்து துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் மணிமேகலை, மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார், மற்றும் டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் பழனி யை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News