உள்ளூர் செய்திகள்

100 சதவீதம் தேர்ச்சி

Published On 2023-06-16 08:05 GMT   |   Update On 2023-06-16 08:05 GMT
  • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
  • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News