- என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளி யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவ ருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருது நகரில் உள்ள ஒரு பள்ளி யில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டு மான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படு கிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ்குமார், ரவி செல்வம் பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் உடலை உற வினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் உறவினர்கள் நரிக்குடி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் கட்டிட என்ஜினீயர் நெல்லையை சேர்ந்த ஜெயசீலன் ராஜா (29), மேற்பார்வையாளர் கட்டனூரை சேர்ந்த பால்சாமி மற்றும் பரமக்குடியை சேர்ந்த விஜயராகவன் ஆகிய 3 பேைர போலீசார் கைது செய்தனர்.