உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை துரத்தி சென்று கடித்த வெறிநாய்

Published On 2022-10-21 08:03 GMT   |   Update On 2022-10-21 08:03 GMT
  • வெறிநாய் பொதுமக்களை துரத்தி சென்று கடித்தது.
  • இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.

தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி தொகுதிகளில் தெருநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, மாப்பிள்ளை சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய் ஒன்று துரத்திச்சென்று கடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News