இடைநிற்றலை தவிர்த்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை
- விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்த்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் வட்டம், ரோசல்பட்டி ஊராட்சியில் பள்ளி செல்லா மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக கலெக்டர் மேகநாதரெட்டி கள ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
அதன்படி, ரோசல்பட்டி ஊராட்சியில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், ஆர்த்தி (7-ம் வகுப்பு), அழகுலட்சுமி (7-ம் வகுப்பு), காவியா (8-ம் வகுப்பு) லட்சுமி பிரியா (12-ம் வகுப்பு), பவித்ரா (10-ம் வகுப்பு) கார்த்திகைச்செல்வி (6-ம் வகுப்பு), சுப்புலட்சுமி (10- ம் வகுப்பு) ஆகிய மாணவிகள் பள்ளி செல்லாமல் இருந்தனர்.
அந்த மாணவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சந்தித்து, பள்ளி செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், படித்ததால் தான் நாங்கள் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம் என்றும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவ ட்டத்தில், விருதுநகர், வெம்ப க்கோட்டை, ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் முதல் கட்டமாக 1032 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் கல்வி பயில்வதற்கு மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கலெக்டர் மேகநாதரெட்டி. தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.