- 1,314 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
- வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களில் படித்த 1,314 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.
இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற் றார். வேலை வாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், கோவை சி.டி.எஸ். இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு 1,314 மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.
அதற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவ-மாணவிகள் பொறியியல் பட் டம் படித்து முடிக்கிறார்கள். இதில் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே என்ஜினீயரிங் தொடர்பான வேலை கிடைக்கிறது. மற்ற 80 சதவீதம் பேர் பல்வேறு துறைகளில் வேலைகள் பெறுகிறார்கள். இதனை தவிர்த்து என்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் டீன் மாரிசாமி, பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரம ணியன், பி.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தராஜன், பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பரங்கிரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புத்துறை பேரா சிரியர் சுதாகர் நன்றி கூறினார்.