உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-10-20 08:09 GMT   |   Update On 2022-10-20 08:09 GMT
  • சிவகாசியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும்.

சிவகாசி

சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது பற்றி சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு நிலைய அலுவலர்கள் அழகுசாமி, அன்னராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ராக்கெட் வெடிக்கும் போது குடிசைப்பகுதியில் தீ விபத்து ஏற்படாத வகையில் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க விடக்கூடாது. பட்டாசுகளை பற்ற வைக்க நீண்ட வத்திக்குச்சி பயன்படுத்த வேண்டும். உடலில் தீ புண் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் எண்ணையோ அல்லது பேனாவுக்கு பயன்படுத்தக்கூடிய மையோ உபயோகப்படுத்தக்கூடாது. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பிறகு அருகில் உள்ள வாளி தண்ணீரில் நனைக்க வேண்டும். இறுக்கமான ஆடை மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும். உடலில் தீப்பிடித்தால் ஓட முயற்சிக்காமல் தரையில் விழுந்து உருள வேண்டும். மேலும் பட்டாசுகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது புகைபிடிப்பதோ, தீப்பொறி ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தவோ கூடாது.

மேலும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாகனங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News