- தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியானார்.
- மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி கற்பக வல்லி (வயது 30). முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கற்பகவல்லி தனது 5 வயது மகன் அய்யப்பனுடன் மாமியார் மாரியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.
கூலி வேலைக்கு சென்று குடும்பத்ைத காப்பாற்றி வந்த கற்பகவல்லி நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன் அய்யப்பன், பாட்டி மாரியம்மாளுடன் வீட்டில் இருந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று மாலை ஊருக்கு வடபுறம் வைரமுத்து என்பவர் கட்டி வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் அய்யப்பன் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்பு மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.